4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தைத் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். 2023 பிப்ரவரி மாதம் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேட்ன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அடுத்து தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. படத்தின் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தெலுங்கில் 'டாலர் டிரீம்ஸ், ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, பிடா, லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. மாறுபட்ட படங்களைக் கொடுப்பவர் என்று பெயரெடுத்தவர். சேகர் கம்முலா, தனுஷ் கூட்டணி புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.




