ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? |

அஞ்சலி நடித்துள்ள வெப் தொடர் ஃபால். இதனை பானிஜாய் நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலியைத் தவிர, இந்தத் தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். அஜேஷ் இசை அமைத்துள்ளார்.
அஞ்சலி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுகிறார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் சில மாதங்களுக்கு பிறகு நினைவு திரும்புகிறார். அவருக்கு கடைசி 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் மறந்து விடுகிறது. தான் தற்கொலை செய்ய முயற்சித்தோமா, அல்லது தன்னை யாரும் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது அவருக்கு தெரியவில்லை. இதனை அவர் கண்டுபிடிப்பதே படத்தின் கதை. இது 'வெர்டிஜ்' என்ற தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இது வருகிற டிசம்பர் 9ம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




