அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் மூன்றாவது தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வேணு உடுகுலா இப்படத்தை இயக்க இருப்பதாகவும், சமீபத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தையும் சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளனர். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.