ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் பாடிய 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெறும் அடுத்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. .




