படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
ரஜினி நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு திரைக்கு வந்த படம் பாபா. அவருடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ரஜினி கதை எழுதி தயாரித்து நடித்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாபா படம் வெளியானபோதும் ரஜினியின் கேரியரில் ஒரு முக்கிய தோல்வி படமாக அமைந்து விட்டது. இந்த நிலையில் தற்போது இந்த பாபா படத்தை மீண்டும் எடிட் செய்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி வெளியீடும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் அனிருத்தும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இசையமைப்பாளர் அனிருத் தான் சிறுவனாக இருந்தபோது இந்த பாபா படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இது குறித்த தகவலை அனிருத்தும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ரஜினியின் பாபா கெட்டப்பில் அவர் சிறுவனாக நின்று கொண்டிருக்கும் படத்தின் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.