தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மீனவர்கள் பிரச்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துவங்கும் படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக முடிக்க பாலா - சூர்யா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.