எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அஜித்தை பொறுத்தவரை திரையுலகைச் சேர்ந்த எந்த விதமான விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். அதேசமயம் தனது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் பயணம் தவிர, தனது குழந்தைகள் சம்பந்தமான நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சி என செலக்டிவான சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னை ரசிகர்களுடன் எந்த தயக்கமுமின்றி புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை அவரை ஒரு ரசிகராக எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நீண்ட நாளைக்கு பிறகு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு மனதில் போற்றி பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். சோஷியல் மீடியாவில் எப்போதுமே அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பதால் இருதரப்பு ரசிகர்களும் இந்த சந்திப்பை வரவேற்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.