சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கான பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. அதைப் படமாக்கச் சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுதான் 'வாரிசு' படத்தின் ஆந்திரா, தெலங்கானா சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. அடுத்து இந்த சர்ச்சையை படக்குழுவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.