காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் 100 படங்களுக்கும் மேல் தயாரித்து பல புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பெருமை கொண்டது ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது ஜீவா கதாநாயகனாக நடிக்கும் 'வரலாறு முக்கியம்' படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 9ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் தனுஷ் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சௌத்ரி, தனுஷ் சந்திப்பு நடந்துள்ளது. எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்திப் பறவை', ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த 'ஜிப்ஸி' படங்களைத் தயாரித்த அம்பேத்குமார் சமீபத்தில் கதை ஒன்றைக் கேட்டிருக்கிறார். மிகச் சிறப்பான அந்தக் கதையைப் பற்றி அவர் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியிடம் பேசியிருக்கிறார். தனுஷ் அந்தக் கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை நடந்திருக்கிறது.
தனுஷின் மேனேஜரைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய தயாரிப்பாளர் தன்னை வந்து சந்திப்பதை விட அவரை நாமே போய் சந்திப்போம் என தனுஷே தயாரிப்பாளர் சௌத்ரி அலுவலகத்திற்குச் சென்று அவரை சந்தித்திருக்கிறார். தனுஷின் இந்த மரியாதை, பண்பு குறித்து சௌத்ரி மனம் நெகிழ்ந்துவிட்டாராம். பின்னர் படம் குறித்து பேச்சு வார்த்தை நடந்துள்ளது. எல்லாம் சரியானபடி வந்தால் ஆர்பி சௌத்ரியின் தயாரிப்பில் முதல் முறையாக தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.