பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா |

ஜல்லிக்கட்டு ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக பிரபலமாகி பிக்பாஸ் ஜூலியானார். ஆனால், அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் வெளியுலகில் அவர் பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆனது. பிக்பாஸூக்கு பின் படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வந்த ஜூலிக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து விட்டதை பிடிக்க மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் என்ட்ரியானார். சொல்லியடித்து சாதித்தார். ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதன்பின் பல கமர்ஷியல் நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், சீரியல்களில் கெஸ்ட் ரோல் என கலந்து கொண்டு வந்த ஜூலி, தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' என்ற தொடரில் கொற்றவை என்ற கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார். இது தொடர்பாக வெளியான புதிய புரோமோவை வைத்து பார்க்கும் போது ஜூலியின் கதாபாத்திரம் அந்த தொடரில் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஜூலிக்கு இது நல்லதொரு கம்பேக்காக நிச்சயம் அமையும் என ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.




