தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் சீசன் 2ல் நடித்தார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீசன் 2வின் பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார். சின்னத்திரை நடிகைகளில் அதிக பேன் பாலோயர்களை கொண்ட ஆல்யாவை, 'மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்' என ரசிகர்கள் மொய்த்து வந்தனர்.
அண்மையில் ஆல்யா ஷூட்டிங் கிளம்பி செல்லும் வீடியோவை வெளியிட்டு தனது கம்பேக்கை உறுதி செய்திருந்தார். அதுமுதலே ஆல்யாவின் புதிய ப்ராஜெக்ட் பற்றிய செய்திகள் இணயதளங்களில் உலா வந்தது. அவர் விஜய் டிவியில் தான் மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்று பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், அவர் மற்றொரு ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் என்ட்ரியாக உள்ளார் என்று தெரிய வருகிறது. மேலும், 'டீலா நோ டீலா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரிஷி, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் ஆல்யா நடிக்க உள்ளார் என்றும், விரைவில் அந்த சீரியலின் புரோமோ வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே, ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் நடித்து வரும் கயல் சீரியல் டிஆர்பியில் டாப் ஆர்டரில் இடம் பிடித்து வருகிறது. தற்போது அவருக்கு போட்டியாக ஆல்யாவும் அதே டிவியிலேயே நுழைந்துவிட்டார் என ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.