'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
‛பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து தனுஷை வைத்து ‛கர்ணன்' படத்தை கொடுத்தார். தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து வாழை என்ற படத்தை இயக்குகிறார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்த படத்தை மாரி செல்வராஜும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 21) ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் துவங்கியது. இதை நடிகர் உதயநிதி துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படத்தில் நான்கு சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.