மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மழை கொட்டிய நாட்களில் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு சற்றே இடைவெளி விட்டிருக்கிறார்கள்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னால் கிரேன் விபத்து ஏற்பட்டு நின்று போனது. அடுத்து கொரோனா தாக்கம் வந்ததால் மீண்டும் ஆரம்பமாகவில்லை. பின்னர், இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இடையே பிரச்சனை வந்தது. அப்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார் இயக்குனர் ஷங்கர். கடந்த வருடம் ஆரம்பமான அப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடமாகியும் இன்னும் முடியவில்லை. தற்போது பாடல் காட்சி படப்பிடிப்புக்காக படக்குழுவினர் நியூசிலாந்து சென்றுள்ளார்கள்.
'விக்ரம்' படம் வெளிவந்து பெரும் வெற்றி பிறகு 'இந்தியன் 2' பிரச்சினைகளை பேசித் தீர்த்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். 'இந்தியன் 2, தெலுங்குப் படம்' என இரண்டையும் தன்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களாக இருந்த இன்றைய இயக்குனர்கள் சிலரின் உதவியுடன் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களையும் அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.