ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் |
பெங்களூரை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் திருந்தவில்லை அங்கிருந்தபடியே, தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கில் சுகேஷுக்கு வெளியில் இருந்து உதவியதாக நடிகை ஜாக்குலின் பெர்ணாடஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது. சுகேசும் ஜாக்குலின் எனது காதலிதான், ஆனால் அவருக்கும் மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
என்றாலும் அமலாக்கத்துறை ஜாக்குலினை பல கட்டமாக விசாரித்து குற்றவாளி பட்டியலில் இணைத்தது. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகை ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரிடம் அதிகளவில் பணம் இருப்பதால், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று நீதிமன்றத்தில் கூறியது.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 50 ஆயிரத்துக்கான பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கான தனிநபர் உத்தரவாதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.