ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரும், 'ஆர்ஆர்ஆர்' படக் கதாநாயகியுமான ஆலியா பட் பத்து நாட்களுக்கு முன்பு நவம்பர் 6ம் தேதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். அவருக்கும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. ஜுன் மாதத்தில் ஆலியா தாய்மை அடைந்திருப்பதாக ரன்பீர் கபூர் அறிவித்தார்.
திருணமாகி, தாய்மை அடைந்த பின்னும் ஆலியா பட் அவர் நடித்து வெளிவந்த படங்களான 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' ஆகிய படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றி பெற்றது.
குழந்தை பெற்ற பின் கடந்த பத்து நாட்களாக தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் எதையும் பகிராமல் இருந்தார். நேற்று அவருடைய உருவம் சரியாகத் தெரியாத அளவுக்கு 'அவுட் ஆப் போகஸ்' செய்து, கையில் 'மம்மா' என்று எழுதியிருந்த காபி கோப்பைக்கு போகஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் லைக் செய்த, அந்த புகைப்படத்திற்குக் கூட 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.