டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று (நவ.,11) வெளியாக இருந்த நிலையில் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக ஊடகங்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியின் போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணியை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, 'உண்மையா புஜ்ஜி ஒரு ஃபன்னான பர்சன். ஆனா, பிக்பாஸ் வீட்டுல ரொம்ப சீரியஸாவே இருக்கான். அதுதான் ஏன்னு தெரியல. இரண்டு நாளைக்கு முன்னாடி சண்டை கூட போட்டுருந்தான். அது புஜ்ஜியோட கேரக்டரே இல்ல. ஒருவேளை பிக்பாஸ் போனா அப்படி மாறிடுவாங்களா? அல்லது வேணும்னே பன்றானான்னு டவுட்டா இருக்கு' என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அண்ணனை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.