175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
இயக்குனர் ஷங்கர் தனது இத்தனை வருட திரையுலக பயணத்தில் ஒரே நேரத்தில் ஒரு படம் மட்டுமே இயக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்தநிலையில் தற்போது ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தையும், இன்னொருபக்கம் கமலின் இந்தியன்-2 படத்தையும் மாறி மாறி இயக்கிவருகிறார்.
இந்த பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக வேள்பாரி என்கிற நாவலை அவர் படமாக இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த படம் குறித்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் தான் கதை எழுதியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்கிற நாவலை படமாக்க உள்ளார். இது குறித்த முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக ஷங்கர் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இயக்குவதாக அறிவித்ததும் அதன்பிறகு அந்நியன் பட தயாரிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்தே ரன்வீர் சிங்கை இந்த வேள்பாரி படத்தில் ஷங்கர் நடிக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.