பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'விக்ரம்'. அப்படத்தின் வெற்றியும், வசூலும் கமல்ஹாசனை மேலும் சில பிரம்மாண்ட படங்களை எடுக்க தைரியத்தைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக உள்ள 'கமல்ஹாசன் 234'வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
'விக்ரம்' படத்தின் வெற்றியால் சில பல சர்ச்சைகள், பஞ்சாயத்துகளால் நின்று போன 'இந்தியன் 2' படத்தை மட்டும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவுகளை எட்டி படத்தை உடனடியாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த படத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்ததுதான் அதற்கு முக்கிய காரணம் என்றும் சொன்னார்கள். 'விக்ரம்' படத்தை விட பெரும் வெற்றியை 'இந்தியன் 2' படத்தால் கொடுக்க முடியும் என்பதே அதற்கு முக்கிய காரணம்.
அதே சமயம், ஆறு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிக்க ஆரம்பமாகி, அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்பும் நடந்த 'சபாஷ் நாயுடு', மற்றும் அறிவிக்கப்பட்டு, சில வீடியோ புரமோஷன்களும் செய்யப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்களை மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அடுத்து ஷங்கருடன் 'இந்தியன் 2', மணிரத்னத்துடன் 'கமல்ஹாசன் 234' என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான்' ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிப்பாரா என்பது சந்தேகம்தான் என்பது கோலிவுட் தகவல்.