நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. ஒரு மாதத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் 500 கோடி வசூலைத் தொட்டுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் சனிக்கிழமையன்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். படத்தின் கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபலா, ஐஸ்வர்ய லட்சுமி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்த யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், அன்று இரவு மற்றொரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற 'பார்ட்டி'யில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி, படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், பார்த்திபன், படத்தில் இளவரசிகளாக நடித்த த்ரிஷா, சோபிதா துலிபல்லா, சீனியர் நடிகை ஜெயசித்ரா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், நடன இயக்குனர் பிருந்தா, கலை இயக்குனர் தோட்டா தரணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினிகாந்த், குஷ்பு, லிசி உள்ளிட்டவர்களும் மணிரத்னம், சுகாசினி ஆகியோருக்கு நெருக்கமான சில சினிமா பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக அந்த சக்சஸ் பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டி பற்றிய ஒரு சில புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.