தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
நடிகர் கமல்ஹாசன் நடித்த ‛விக்ரம்' படம் அவரது சினிமா வரலாற்றிலேயே வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நாளை (நவ.,7) பிறந்தநாளை கொண்டாட உள்ள கமல்ஹாசனின் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன், துணிவு பட இயக்குனர் எச்.வினோத் ஆகியோரின் படங்களில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், மணிரத்னம் படம் குறித்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த கூட்டணி 35 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் இணைந்திருந்தது. இது இன்றளவும் பேசப்பட்டு வரும் நிலையில், அதே கூட்டணி இணைய இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.