ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
சன்னி லியோன், சதீஷ் நடிப்பில் இயக்குநர் யுவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி படமாக தயாராகி உள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய சன்னி லியோன் : ‛‛தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம். இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை'' என்றார்.
ஜிபி முத்து கூறுகையில், ‛‛இது தான் எனது முதல் திரைப்படம். முன் அனுபவம் இல்லாத எனக்கு இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள்'' என்றார்.
நடிகர் சதீஷ் பேசியதாவது : ‛‛இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன் நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர். அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.