'விடுதலை 2' டிரைலர் வசனம்: விஜய்யை குறி வைக்கிறதா? | சூர்யா 45 படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று ஆரம்பம் | 30 மில்லியனைக் கடந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் நடனம் | 9 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்? கமென்ட் 'ஆப்' செய்த அகில் | 5 வருடப் பயணம்: அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி | 257 நாட்கள் நடந்த 'விடுதலை 1, 2' படப்பிடிப்பு | தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்! | பிளாஷ்பேக்: பழம்பெரும் பாலிவுட் நடிகர் வி சாந்தாராம் தயாரித்த பைந்தமிழ் திரைக்காவியம் “சீதா கல்யாணம்” | எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ; அதிதிக்கு சித்தார்த் புகழாரம் | நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் |
இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு மகாத்மாக காந்தி அகிச்சை வழியில் போராடிய போது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். அந்த ராணுவத்தில் பெண் உளவாளியாக இருந்தவர் நீரா ஆர்யா. அவரது வாழ்க்கை இப்போது நீரா ஆர்யா என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகிறது. இதில் நீரா ஆர்யாவாக கன்னட நடிகை ரூபா அய்யர் நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாம் கொண்டாட வேண்டிய ஒரு தேசப்போராளியின் சரித்திர கதையில் நான் நடிக்கிறேன். ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளி நீரா. அவரது கணவர் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த போதிலும், அவர் நாட்டிற்காக போராடினார். சுபாஷ் சந்திரபோஸின் இருப்பிடம் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன. தேசத்துக்காக தன் கணவனையே கொன்றவர். ஆனால் தன் கடைசி காலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தியவர்.
ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படும். 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன். சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. லண்டன் மற்றும் அந்தமான் சிறையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. என்றார் ரூபா அய்யர்.
ரூபா அய்யர் சிறந்த இயக்குனருக்கான விருதை இரண்டு முறை கர்நாடக அரசிடம் பெற்றவர். இதுவரை 5 திரைப்படங்களை தயாரித்துள்ளார், 4 படங்களை இயக்கி உள்ளார். 20 விளம்பர படங்களை இயக்கி உள்ளார்.