சினிமாவாகும் ஜெய்சங்கர் வாழ்க்கை | காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள் | மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? |
கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே கூட 'காந்தாரா' படம் இப்படி ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த பல ஆண்டுகளாக கன்னட சினிமாவைக் கண்டு கொள்ளாமல் இருந்த சினிமா ரசிகர்களை தங்கள் பக்கம் முழுவதுமாகத் திருப்பியது 'கேஜிஎப்' படம். அதற்குப் பின் இந்த ஆண்டு வெளிவந்த அதன் இரண்டாம் பாகமான 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலையும் கடந்து ஆச்சரியப்படுத்தியது.
இந்த ஆண்டிலேயே மற்றுமொரு கன்னடப் படம் வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 'கேஜிஎப் 2' படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டு வெளியான மொழிகளில் நிறையவே புரமோஷன் செய்தார்கள். ஆனால், 'காந்தாரா' படம் கன்னடத்தில் மட்டுமே முதன் முதலில் வெளியானது. இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். இருந்தாலும் வெளியான அனைத்து டப்பிங் மொழிகளிலும் கூட நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
உலக அளவில் தற்போது இந்தப் படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.280 கோடி வசூலையும், வெளிநாடுகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்று ரூ.300 கோடி சாதனையைப் புரிந்துள்ளது. இப்படத்தின் வெற்றி பிராந்திய அளவிலான கலாச்சாரங்களை வெளிப்படுத்தக் கூடிய படங்களுக்கு இப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
இனி, அந்தந்த மொழி, மாநில, கலாச்சாரப் படங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.