'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் காசிக்கு புனித பயணம் சென்றிருந்தார் விஷால்.
அங்கு தனது அனுபவத்தை பகிர்ந்த விஷால் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியை பாராட்டி இருந்தார். “அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக சல்யூட்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை ரீ-டுவிட் செய்துள்ள மோடி, “உங்களுக்கு காசியில் நல்லதொரு அனுபவம் கிடைத்தற்காக நன்றி” என்று தெரிவித்துள்ளார்.