ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இந்திய நடிகைகளையும், மாலத் தீவையும் பிரிக்க முடியாது என்றாகிவிட்டது. படப்பிடிப்பில் சிறு இடைவெளி கிடைத்தாலும், அதை விடுமுறைக் கொண்டாட்டமாக மாலத் தீவிற்குச் செல்வது என நமது நடிகைகள் வழக்கமாக்கிவிட்டார்கள். அந்த வரிசையில் தற்போது மாலத் தீவில் விடுமுறையைக் கொண்டாடி வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் ரகுல் ப்ரீத்தும் நடிக்கிறார். ஆனால், மீண்டும் ஆரம்பமான படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொண்ட செய்திதான் வெளியானது. ரகுல் இன்னும் கலந்து கொள்ளாமல்தான் இருக்கிறார். ஒருவேளை அவருடைய படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பு புத்துணர்ச்சிக்காக இப்படி விடுமுறைக்கு மாலத் தீவிற்கு சென்றிருக்கலாம்.
கடந்த இரண்டு நாட்களாக மாலத் தீவில் ரகுல் ப்ரீத் எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் கடற்கரை புகைப்படங்களாகவும், நீச்சல் குள புகைப்படங்களாகவும்தான் உள்ளன. இங்கு நமக்கு மழை ஆரம்பித்திருக்க மழை இல்லாத மாலத்தீவில் மகிழ்ச்சியாக விடுமுறை கொண்டாடி, தனது புகைப்படங்களால் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் ரகுல் ப்ரீத்.