175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் நடித்த புதுமுக நடிகரும், தொழிலதிபருமான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது. தற்போது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கணவருடன் திருப்பதிக்கு சென்ற நமீதா அங்கு சாமி தரிசனம் செய்தார். கடந்த முறை திருப்பதி வந்தபோது அங்கு ஏற்பாடுகள் சரியில்லை என்று நமீதா குற்றம் சாட்டியிருந்தார். அதனால் இந்த முறை தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்து, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போய்கொண்டிருக்கிறது. எனது குழந்தைகள் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன். தற்போது படங்களில் நடிப்பதை விட அரசியலிலேயே அதிக ஆர்வம் உள்ளது. விரைவில் தீவிர அரசியலில் குதிக்க இருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்” என்றார்.
நமீதா கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ததது குறிப்பிடத்தக்கது.