படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுக்களையும் இந்த படம் குறித்த பிரமிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டி பொட்டு வைத்தது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற மலையாள இசைக்குழுவினர் உருவாக்கிய நவரசம் என்கிற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்கிற சர்ச்சை கிளம்பியது.
காந்தாரா படத்திற்கு இசை அமைத்த அஜனீஷ் லோக்நாத் இதை மறுத்து இருந்தாலும் தாய்க்குடம் பிரிட்ஜ் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தது. சொன்னதுபோலவே கோழிக்கோடு செஷன்ஸ் கோர்ட்டில் காந்தாரா படத்தில் இருந்து வராஹ ரூபம் பாடலை நீக்க வேண்டுமென வழக்கும் தொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வராஹ ரூபம் பாடலை காந்தாரா படத்திலிருந்து, தியேட்டர்களிலோ வேறு எந்தவிதமான வெளியீட்டு தளங்களிலோ பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.