சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி | கண்ணப்பாவுக்காக உ.பி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு | அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில் | இலங்கையில் சிக்கித் தவிக்கும் 'பராசக்தி' பணியாளர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், காயத்ரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை அமைத்திருந்தார். ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான இந்த படம் தற்போதும் ஒரு சில தியேட்டர்களில் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் 100வது நாள் விழாவை வருகிற நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்த இருக்கிறார்கள். இது தொடர்பாக ராஜ்மல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த விழாவில் திரைப்படம் தொடர்புடைய அனைவரும் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இணை தயாரிப்பாளரான மகேந்திரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.