சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் மற்றும் ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் இணைந்து தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாரித்திருக்கும் படம் 'DR 56. இந்த படத்தின் நாயகியாக பிரியாமணி நடித்துள்ளார். பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். ராகேஷ் திலக் ஒளிப்பதிவு செய்துள்ளார். நோபின் பால் இசை அமைத்துள்ளார். இதில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். ஹீரோக்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது : இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவி வரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த கதையை சொல்லும்போதே பிரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான சிபிஐ அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். பிரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் படம் இது. படம் வருகிற டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.