விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான வெளியிட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 21ம் தேதியன்று தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்திற்கான பேட்டிகளைக் கொடுக்க படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர். காலை முதலே அந்த வேலைகள் நடந்து வருகிறது. இன்று மாலை நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 'லைகர்' கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, 'பாகுபலி' வில்லன் ராணா டகுபட்டி, பிரபல இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிவகார்த்திகேயனைப் போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா. அதனால், அவர் இன்று சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட விழாவில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என டோலிவுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.