''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஹிந்தித் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான அமிதாப் அந்தக் காலத்தில் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 70 வயதைக் கடந்த பின்னும் அவரது வயதுக்கேற்ற பல சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்னமும் தனக்கென ஒரு தனி இடத்தை பாலிவுட்டில் பதித்துள்ளார். இன்று 80வது வயதை எட்டும் அமிதாப்புக்கு பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்திய பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'குட் பை' படக்குழுவினர் ஒரு சிறப்பைச் செய்துள்ளனர். இன்று 80வது வயதை எட்டும் அமிதாப்பின் 'குட் பை' படத்தைப் பார்க்க 80 ரூபாய் மட்டுமே கட்டணமாக இந்தியா முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை, புனே, டில்லி, கோல்கட்டா, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் 80 ரூபாய் கட்டணத்திற்கே டிக்கெட்டுகளை விற்கின்றனர். அதற்கான ஆன்லைன் முன்பதிவுகளிலும் 80 ரூபாய் கட்டணம்தான் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் 80 ரூபாய் கட்டணத்திற்கு டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை. அவர்கள் தங்களது வழக்கமான கட்டணங்களையே நிர்ணயித்துள்ளனர்.