''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சில ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், தற்கொலை எண்ணம் கூட வந்ததாக அவேரே முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தனது தாயாரின் பராமரிப்பு காரணமாகவே தான் அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு மன அழுத்தத்தால் மனநல பாதிப்பால் எவரும் தற்கொலை முயற்சி ஈடுபடக்கூடாது என்று அதை தடுக்கும் முயற்சியாக லைவ் லவ் லாப் என்று அமைப்பினை பெங்களூர் மற்றும் ஒடிசாவில் தொடங்கினார் தீபிகா படுகோனே.
தற்போது தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஈக்காட்டில் செயல்பட்டு வரும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் தனது லைவ் லவ் லாப் அமைப்பையும் இணைத்து செயல்பட்டு வருகிறார் தீபிகா படுகோனே. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஈகாட்டிற்கு சென்ற தீபிகா படுகோனே அங்கு மனநலம் பாதித்தவர்களை பராமரிக்கும் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தனது சார்பில் உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அவர்களை பராமரிப்புகளின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதில் அவர்களை பராமரிப்பவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதனால் தான் என்னுடைய அம்மா இங்கே இருக்கிறார் எனது சகோதரியும் மிக ஆர்வமாக இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பராமரிப்புகளின் கதைகளை கேட்கும் போது அது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இன்னும் பெரிய அளவில் உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.