செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இன்றைய தினம் தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஹிந்தி சினிமாவில், ஷாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் 1969ம் ஆண்டு அறிமுகமானவர் அமிதாப்பச்சன். அந்த முதல் படத்திலேயே அவர் நடிப்பிற்கு விருது கிடைத்தது. அதன் பிறகு ஆனந்த், பர்வானா, பியார் கி கஹானி என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார் அமிதாப்பச்சன். அதோடு தனது நடிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் அமிதாப்பச்சன்.
அது மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அக்டோபர் 11ம் தேதியான இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் அமிதாப்பச்சனை திரையுலயினரும் ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள். அதோடு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்து தனது கைகளை அசைத்தார் அமிதாப்பச்சன். அப்போது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாளை வாழ்த்துக்களை கூற அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.