ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இன்றைய தேதியில் தென்னிந்திய அளவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார் தான். கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து வரும் சரத்குமார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல் தற்போது குணச்சித்திர நடிகராக, வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டதால் அவருக்கு வேறு மொழியில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார், நடிகர் திலீப் நடிக்கும் படத்திலும் தற்போது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்பை வைத்து ஏற்கனவே ராம்லீலா என்கிறார் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே மலையாளத்தில் 2011ல் வெளியான கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படத்தில் சரத்குமாரும் திலீப்பும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.




