அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து திரை உலகை சார்ந்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், ‛‛பொன்னியின் செல்வன் படம் வசீகரிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான சரித்திர படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் மணிரத்னம் நிரூபித்திருக்கிறார். அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலைவணங்குகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இனிமையாக உள்ளது. மூன்று மணி நேரம் சூழ்ச்சிகள் நிறைந்த இந்த கதை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இப்படி ஒரு சிறப்புமிக்க வரலாற்று படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.