என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

'கேஜிஎப்' படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷாப் ஷெட்டி இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், ரிஷாப் ஷெட்டி, கிஷோர், அச்சுத் குமார், சப்தமி கவுடா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் கன்னடத்தில் வெளிவந்த படம் 'கன்டரா'.
ரசிகர்களின் பாராட்டுக்கள், விமர்சகர்களின் வரவேற்பு, தியேட்டர்களில் நல்ல வசூல் என இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கன்னட சினிமாவில் மீண்டும் ஒரு தரமான படம் என படக்குழுவைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் வசூலும், வரவேற்பும் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தமிழ் நடிகரான சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்து 'கேக்' ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் கவுடா பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்து, இதுதான் சிம்பு எனவும் பாராட்டியுள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளிவரலாம்.