ஆஸ்கர் நாமினேஷனில் 7 இந்தியப் படங்கள் | சவுந்தர்யாவின் லவ் புரொபோஸ் ஸ்கிரிப்ட்டா? விஷ்ணு பளீச் பேட்டி | 'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விகாஸ் | நடிகை வடிவுக்கரசியை புகழ்ந்த ஸ்ரீகுமார் | இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் - கலையரசன் | தெலுங்கு இயக்குனர் மீது பூனம் கவுர் குற்றச்சாட்டு | விஜய் படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன் - மீனாட்சி சவுத்ரி | 'புஷ்பா 2' படத்தில் கூடுதல் 20 நிமிடங்கள் சேர்ப்பு | கார் ரேஸ் பயிற்சியில் விபத்து: அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பிய அஜித் | ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதலா? |
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவணப்பட கலைத்திருவிழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‛‛மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.
ராஜராஜ சோழன்
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது... இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்''. இவ்வாறு பேசினார்.
வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் ஹிந்து இல்லையா? சைவம், வைணவம் ஆகியவையும் ஹிந்து மதத்தை சேர்ந்தவை தான் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பார்த்துவிட்டு, நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
ஹிந்து மதம் இல்லை
அப்போது கமல்ஹாசனிடம் வெற்றிமாறனின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கமல் பதிலளித்ததாவது: ஹிந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. ஹிந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர், நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர்.. தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரி.
ஆதிசங்கரர்
எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்தது. அதையெல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வருகிறார். இதெல்லாம் சரித்திரம். இந்த சரித்திரத்தை இப்பொழுது கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் இது சரித்திர புனைவைப்பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம். இங்கு சரித்திரத்தை திணிக்க வேண்டாம். மொழி பிரச்னையை இங்க கொண்டுவரவும் வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
வெற்றிமாறன் பேச்சை பற்றிய சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசன் புதிதாக கொளுத்தி போட்டுள்ளார். இதுவும் சர்ச்சையாகியுள்ளது.