'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நெல்சன் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனபோதிலும் விஜய் படம் என்பதால் 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனையான நிலையில் தற்போது தமிழக விநியோக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக உரிமையை 80 கோடி ரூபாய்க்கு கொடுப்பதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாராக இருக்கிறார் . இதற்கு முன்பு விஜய் நடித்த மாஸ்டர் படம் தமிழகத்தில் 82 கோடி ஷேர் செய்திருப்பதால் அவர் இந்த தொகையை நிர்ணயித்துள்ளார். ஆனால் கடைசியாக விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் தமிழகத்தில் 60 கோடி மட்டுமே வசூல் செய்ததால் வாரிசு படத்தை 80 கோடிக்கு வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயங்கி நிற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.