மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு சிறந்த நடிகர், நடிகை, இசை என 5 தேசிய விருதுகளை அறிவித்தது. இதற்கான விழா டில்லியில் இன்று(செப்., 30) நடக்கிறது. இதற்காக ஜிவி பிரகாஷ் டில்லி சென்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ் : ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மொத்த படக்குழுவும் கஷ்டப்பட்டு எடுத்த ஒரு படம் சூரரைப்போற்று. இந்த படத்திற்கு நிறைய விருது கிடைத்தது மகிழ்ச்சி. இது எனது முதல் தேசிய விருது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. இயக்குனர் சுதா, சூர்யா உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி. நல்ல படம் எந்த மொழியாக இருந்தாலும் அங்கீகரிக்கப்படுவது சந்தோஷம். வரவேற்கனும். அடுத்து ஹிந்தி சூரரைப்போற்று படத்திற்கு இசையமைக்கிறேன். கங்கனாவின் எமெர்ஜென்சி, வாடிவாசல் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறேன். பாரதிராஜா உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதுதவிர நிறைய படம் போய் கொண்டு இருக்கிறது.