இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபகாலமாக டிவி சேனல்களிலும், யுடியூப் சேனல்களிலும் பிரபலங்களை பேட்டி எடுப்பவர்கள் பரபரப்பாக ஏதாவது கேட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ச்சையான, சங்கடப்பட வைக்கின்ற கேள்விகளை கேட்பதை வாடிக்கையாக மாற்றிவிட்டார்கள்.
சமீபத்தில் அப்படி மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவரிடம் சில குதர்க்கமான கேள்விகளை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கேட்டதால், அவர் கேமராவை ஆப் பண்ண செய்துவிட்டு அந்த தொகுப்பாளினியை அனாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுபற்றி பின்னர் புகார் அளிக்கப்பட்டு அந்த நடிகர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இதேபோன்று இன்னொரு மலையாள சேனலில் கவர்ச்சி நடிகையான ஸ்வேதா மேனன் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் கோபமாகி செட்டை விட்டு எழுந்து வெளியே போகும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளர் ஜீவா என்பவர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய ஸ்வேதா மேனன், “உங்களை பற்றி நான் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய படங்களை கொஞ்சமாவது பார்த்துவிட்டு அதுபற்றி நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என்று கோபமாக கூறிவிட்டு வெளியே கிளம்பிச் செல்கிறார்.
ஆனால் அதன்பிறகு ஒரு சில நொடிகள் கழித்து அந்த வீடியோவில் மீண்டும் செட்டிற்கு திரும்பி வரும் ஸ்வேதா மேனன், தொகுப்பாளரிடம் எப்படி நான் உங்களை பிராங்க் செய்தது.. நன்றாக இருந்ததா ?” என்று கேட்டு பார்வையாளர்களுக்கு டுவிஸ்ட் ஒன்றை அளித்துள்ளார். இதுவும் ஒரு வித பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.