விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு , தற்போது கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த சிம்பு, இடையே வெந்து தணிந்தது காடு பட வெளியீட்டிற்காக இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில், பத்து தல படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர். டிசம்பர் 14ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் புரமோஷனை அடுத்த மாதம் முதல் படக்குழு துவக்க உள்ளது.