'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
தமிழில் “ராஜா ராணி” மற்றும் விஜய் நடித்த “தெறி, மெர்சல், பிகில்” ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அட்லீ தனது 36வது பிறந்த நாளை நேற்று முன்தினம் (செப்.,21) கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நேரில் பங்கேற்று அட்லீயை வாழ்த்தியுள்ளனர்.
ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் இணைந்து அட்லீயின் பிறந்தநாளை கொண்டாடி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.