அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கதில் கபடி வீரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
துருவ் விக்ரம் முறைப்படி இசை கற்றவர். நல்ல பாடகரும் ஆவார். இந்நிலையில் அவர் தற்போது 'மனசே' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதனை அவரே இசை அமைத்து இயக்கியும் உள்ளார். இந்த இசை ஆல்பத்தை அவர் நேற்று யுடியூப்பில் வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த இசை ஆல்பத்தில் துருவ் நடித்தும் இருக்கிறார். அவருடன் உஜ்வால் குப்தாவும் இந்த ஆல்பத்தில் இணைந்திருக்கிறார். நடிப்பு கேரியரில் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதால் அதை நிரப்ப இந்த இசை ஆல்பத்தை அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.