''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் போண்டா மணி உயிருக்கு போராடுகிறார். அவருக்கு உதவுங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
போண்டாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை பற்றி பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்த பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‛‛அண்ணன் போன்டா மணிக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அவரின் மேல்சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாராவது அவருக்கு உதவுங்கள். இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சினிமா நடிகரானவர். எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் கல்யாணம் செய்து, இரண்டு குழந்தைகளையும் படிக்க வச்சு, ஆளாகிட்டு இருக்கார். தயவு செய்து அவரை காப்பாத்துங்க நண்பர்களே. அனாதையாக இந்தியாவுக்கு வந்தார். அவர் குழந்தைகளை அனாதையாக போகக்கூடாது. முடிஞ்சதை செய்வோம். உதவுங்க'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.