Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அம்மாவுக்கு வாழ்த்து இல்லை.. சித்திக்கு வாழ்த்து சொன்ன திலீப் மகள்

20 செப், 2022 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Dileep-daughter-wished-kavya-but-not-wish-to-Manju-warrier

மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து திலீப், தன்னுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட, விவாகரத்து பெற்றிருந்த நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 நவம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு மகலாட்சுமி என்கிற பெண் குழந்தையும் பிறந்தது.

அதேசமயம் திலீப் - மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகளான மீனாட்சி, பெற்றோரின் விவாகரத்துக்கு முன்னரே தாயை விட்டு பிரிந்து திலீப்புடன் வசித்து வந்தார். மகளின் ஒப்புதலுடன் தான் காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார் திலீப். சொல்லப்போனால் பெற்ற தாயான மஞ்சு வாரியரை விட, தனது சித்தியான காவ்யா மாதவனிடம் தான் மீனாட்சி அதிக ஒட்டுதலுடன் பிரியமாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காவ்யா மாதவனின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மீனாட்சி. அதேசமயம் சில மாதங்களுக்கு முன் வந்துசென்ற அவரது அம்மா மஞ்சு வாரியாரின் பிறந்தநாளுக்கு மகள் மீனாட்சி எந்த ஒரு வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெந்து தணிந்தது காடு படத்திற்கு வினீத் சீனிவாசன் புகழாரம்வெந்து தணிந்தது காடு படத்திற்கு ... ரூ.57 கோடிக்கு விலைபோன காட்பாதர் ஓடிடி உரிமை ரூ.57 கோடிக்கு விலைபோன காட்பாதர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

John Miller - Hamilton,பெர்முடா
21 செப், 2022 - 01:41 Report Abuse
John Miller இதைப் போலத்தான் ஒரு திராவிடக் கட்சி தங்கள் தலைமை அலுவலகம் தில்லியில் இருக்கிறது என நினைத்து வாரத்திற்கு ஒரு முறை படை எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in