10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

ஹிந்தி, தெலுங்கு படங்களின் நடித்து வந்த மீனாட்சி சவுத்திரி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் நடித்தார். என்றாலும் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.
இந்த நிலையில் தற்போது தனது பெயரில் நியூமராலஜிபடி ஒரு எழுத்தை கூடுதலாக இணைத்துள்ளார் மீனாட்சி சவுத்ரி. அதாவது இன்ஸ்டாகிராமில் மீனாட்சி சவுத்ரி என்பதில், ‛என்' -என்ற எழுத்துக்குப் பிறகு ஒரு ‛ஏ' எழுத்தை மட்டுமே எழுதி வந்த மீனாட்சி சவுத்ரி, தற்போது இரண்டு ‛ஏ' எழுத்துக்களை இணைத்து இருக்கிறார். இது குறித்து சில ரசிகர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, நியூமராலஜிபடி இந்த திருத்தத்தை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.