டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. ஒன்று ‛நானே வருவேன்', மற்றொன்று ‛வாத்தி'. இவற்றில் நானே வருவேன் படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது. ஆனால் தேதி இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் இரு மொழி படத்தில் நடித்துள்ளார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் பெயரிட்டுள்ளனர். ஐஸ்வர்ய லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‛வாத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற டிசம்பர் 2ம் தேதி இந்த படம் இரு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.




