வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜித் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பங்காங்கில் நடைபெற உள்ளது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பைக்கில் லடாக்கில் சுற்று பயணம் செய்து வரும் அஜித்குமார், 17,000 அடி உயரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் அஜித் குமார். அவர் அங்கு தரிசனம் செய்யும் காட்சி, நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.