ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரின் முதல் புரோமோ வெளியான போதே, பிற்போக்குத்தனமான சீரியல் என்ற எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால், அதையும் தாண்டி சீரியல் தற்போது வெற்றிகரமாக பயணித்து ரசிகர்களின் குட் புக்கில் இடம்பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலின் புகழ் மேலும் அதிகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த தொடரின் நாயகியான பவித்ரா ஜனனிக்கு போன் செய்துள்ள அனுஷ்கா, 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி, சீரியல் குழுவினர் பாராட்டியுள்ளார். இதனைபதிவிட்டுள்ள பவித்ரா, 'அனுஷ்கா முதலில் போன் செய்த போது ப்ராங்க் என்று நினைத்தேன். தொடர் குறித்து அவர் பாராட்டிய போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது. அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் பொறிக்கப்படும்' எனவும் சிலாகித்து கூறியுள்ளார்.