ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜிஎன்ஆர்.குமாரவேலன் அதன்பிறகு இயக்கிய ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன்பிறகு விக்ரம் பிரபு நடித்த வாகா படம் பெரும் தோல்வி அடைந்தது. தற்போது அவர் அருண் விஜய் நடிப்பில் சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நாளை வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினம் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ஹரிதாஸ் படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் வாகா படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் சினம் படத்திற்காக ஒன்றிணைந்தோம்.
வாகா படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் என் தந்தை, என் முந்தைய படமான ஹரிதாஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் எமோஷன்ஸ்தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் சினம் படத்தின் பயணம் ஆரம்பித்தது. த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான படமாக நிச்சயம் இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள். என்கிறார் குமரவேலன்.